கோவை சோமனூரில் செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்

சோமனூரில் உள்ள செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் இன்று திருப்பூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர். மேலும் இதில் பங்கேற்ற அவர்கள், உயர்சாதியினரை ஒழித்து காட்டுவோம், உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் என்று வீரவணக்க முழக்கமிட்டனர்.


கோவை: கோவை மாவட்டம், சோமனூர் அருகே அரசு பேருந்தில் உயர் சாதியினருக்கு இணையாக அமர்ந்தார் என்பதற்காக செகுடந்தாளி என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர், கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 17-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

செகுடந்தாளி முருகேசன் ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்ட நவம்பர் 17-ம் தேதியை சிறப்பு செய்யும் விதமாக அவரது நினைவு நாளையொட்டி வருடந்தோறும் அன்றைய நாளில் அப்பகுதியில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் அவரது நினைவு தினமான இன்று அப்பகுதியில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேலும் அவரது நினைவிடத்தில் பல்வேறு தரப்பினர் இன்று மரியாதை செலுத்தினர். இதில் ஒரு பகுதியாக கோவை-திருப்பூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர் அவரது நினைவிடத்தில் வீரவணக்க அஞ்சலி செலுத்தினர்.



இதில் பங்கேற்ற திருப்பூர் மாவட்ட புரட்சிகர இளைஞர் முன்னணியினர், உயர்சாதியினரை ஒழித்து காட்டுவோம், உழைக்கும் தமிழராய் ஒன்றிணைவோம் என்ற பேனரை ஏந்தி வீரவணக்க முழக்கமிட்டனர்.



அதன் பின்னர் செகுடந்தாளி முருகேசன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...