பல்லடம் அருகே நடந்து சென்றவர்களை மிரட்டி செல்போன் பறித்த கும்பல் கைது - 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

ஹை டெக் பார்க்கின் பின்புறம் நண்பருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சசிகுமார் என்பவரின் செல்போன் பறிப்பு நிகழ்ந்தது. இது சம்பந்தமாக சசிகுமார் புகார் செய்திருந்த நிலையில் காவல்துறையினர் உடுமலை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுப்பட்டதில் ஆறுபேர் கொண்ட வழிப்பறி கும்பல் சிக்கியது.



திருப்பூர்: பல்லடத்தை அடுத்த சுக்கம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சசிகுமார் (23) இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

கடந்த 13.11.2022 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் கோவையில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹை டெக் பார்க்கின் பின்புறம் தனது நண்பர் முருகேசன் என்பவருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு நபர்கள் இருவரையும் வழிமறித்து மிரட்டி முருகேசனை கீழே தள்ளிவிட்டு சசிகுமாரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சசிகுமார் பல்லடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பல்லடம் பொள்ளாச்சி மற்றும் உடுமலை ரோடு சந்திப்பு பகுதியில் பல்லடம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த ஆறு நபர்களை சந்தேகத்தின் பெயரில் விசாரித்ததில் ஆறு நபர்களும் சேர்ந்து சசிகுமாரை மிரட்டி செல்போனை பறித்துச் சென்ற குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

அதனையடுத்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடியை சேர்ந்த காசிராமன், பிச்சமுத்து, இசக்கிபாண்டி, மணிகண்டன், சுரேஷ் மற்றும் பல்லடத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் ஆகியோரை பல்லடம் காவல்துறையினர் கைது செய்தது மேலும் அவர்கள் திருடிய பொருட்களை மீட்டனர்.



கைது செய்யப்பட்ட ஆறு பேரும் வழிப்பறிப்பு சம்பவத்திற்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் போலிசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...