நீலகிரி கெத்தை மலை பாதையில் தொடரும் யானைகளின் வழிமறிப்பு - அச்சத்தில் வாகன ஓட்டிகள்

கெத்தை மலை பாதையில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் தொடர்ச்சியாக வாகனங்களை வழிமறித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சாலையில் சென்ற காரை காட்டுயானை ஆக்ரோஷமாக துரத்திய காட்சி வெளியாகி உள்ளது. இதனால் பதட்டமடைந்த வாகன ஓட்டிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோவைக்கு நாள்தோறும் கெத்தை மலைப்பாதை வழியாக சென்று வருகின்றனர்.இந்த மலை பாதை அடர்ந்த வனப்பகுதி வழியாக செல்வதால் அடிக்கடி காட்டு யானைகள் சாலைக்கு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக அந்த மலை பாதையில் முகாமிட்டுள்ள யானை கூட்டம் வாகனங்களை வழிமறித்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை அந்த சாலையில் கோவையை நோக்கி சென்ற காரை யானைகள் வழிமறித்தன. பின்னர் ஒரு யானைஆக்ரோஷமாக காரை துரத்தி வந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட கார் ஓட்டுநர் வேகமாக காரை பின்னோக்கி சிறிது தூரம் இயக்கினார். அதனையடுத்து யானை மீண்டும் திரும்பி சென்றது.



அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவர்களும் பைக்கை நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். நீண்ட நேரமாக வாகனங்கள் செல்ல விடாமல் சாலையில் நின்ற யானைகள் வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது.



இதனிடையே கெத்தை மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானை கூட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...