கதிர்நாயக்கன்பாளையத்தில் ஒற்றை காட்டு யானையால் தென்னை மரங்கள் சேதம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது வனத்துறை

தடாகம் பகுதியில் கடந்த 1 மாதமாக சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானை நேற்று இரவு அங்கிருந்த தோட்டத்தில் தென்னை மரங்களை சேதப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரும்போது கவனமாக இருக்க வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை : ஆனைகட்டி மாங்கரை சுற்றி வனப்பகுதிகளால் நிறைந்த பகுதியாகும். இதனால்வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வழக்கமாக இருந்து வந்ததுள்ளன. சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

இவைகள் அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது தடாகம் பகுதியில் கடந்த 1 மாதமாக சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானைமற்றும் கூட்டமாக வரும் யானைகள் சுற்றுப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.



இந்த நிலையில் கோவை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் உலா வந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த தோட்டத்தில் தென்னை மரங்களை சேதப்படுத்திச் சென்றுள்ளது.

இதனால் அப்பகுதியில் ஏற்பட்ட பரபரப்பின் காரணமாக பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரும்போது எச்சரிக்கையாக இருக்க வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் யானை உலா வந்ததை அங்கு இருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...