நேரு குழந்தைகள் மையத்தின் சார்பில் விளையாட்டு தினவிழா


நேரு குழந்தைகள் மையத்தின் முதல் விளையாட்டு விழா நாள் பிப்ரவரி 4ம் தேதியன்று கொண்டாடப்பட்டது. நேரு குழந்தைகள் மையத்தின் இயக்குநர் பி.கிருஷ்ணகுமார் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

குழந்தைகள் அகாடமி முதல்வர் சைதன்யா கிருஷ்ணகுமார் நிகழ்ச்சியினை பாராட்டிப் பேசினார். இந்நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக துணை மாநகர ஆணையர் சட்டம் ஒழுங்கு (தெற்கு) ஜி.எஸ்.அனிதா பங்கேற்றார்.



இந்நிகழ்ச்சியில் நேரு குழந்தைகள் மையத்தைச் சேர்ந்த குழந்தைகள், யோகா, உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் உடல், மனம் மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட விளையாட்டாக இருந்தது.

மேலும், இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 



இப்போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை சிறப்பு விருந்தினர் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...