கூகுள் மேப்பில் லொகேஷன் அப்டேட் செய்யாததால் - கோவையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு எழுத முடியாமல் தவித்த மாணவி

வடவள்ளியை சேர்ந்த மாணவி ஐஸ்வர்யா, பீளமேடு பகுதியில் உள்ள தேர்வு மையத்தை கூகுள் மேப்பில் தேடி வந்த நிலையில், 5 நிமிடம் தாமதமானதால், தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கண்ணீருடன் திரும்பி சென்றார்.



கோவை: தமிழகம் முழுவதும் இன்று டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 49 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த தேர்வில் பங்கேற்பதற்காக கோவை மாவட்டத்தில் மட்டும் 15,000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், கோவை பீளமேடு பகுதியில் உள்ள நேஷனல் மாடல் பள்ளியிலும் இன்று குரூப்-1 தேர்வுக்கான மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 45 அறைகளில் தேர்வாளர்கள் இந்த தேர்வை எழுதினர்.



இந்த நிலையில் கோவை வடவள்ளி சேர்ந்த ஐஸ்வர்யா என்பவர் குரூப்1 தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளார். அவர் தனது செல்போனில் கூகுள் மேப்பை பார்த்து தேடிய நிலையில், இடம் தெரியாமல் தவித்துள்ளார்.



இதனிடையே பல்வேறு இடங்களில் சுற்றிவிட்டு கடைசியாக நேஷனல் மாடல் பள்ளிக்கு வந்த நிலையில், ஐந்து நிமிடம் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவி ஐஸ்வர்யா கூறியதாவது, 2019 ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வுக்காக நான் தயாராக இருந்தேன். பள்ளி நிர்வாகம் கூகுள் மேப்பில் லொகேஷனை அப்டேட் செய்யத் தவறியதால் தற்போது எனது வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

இவ்வாறு மாணவி ஐஸ்வர்யா கூறினார்.

இதேபோல இருபதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுதாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற குரூப் 4 தேர்வின் போது தாமதமாக வந்ததற்காக தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், ஏராளமான மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...