வேளாண் பல்கலையில் மாபெரும் வேளாண் விழிப்புணர்வு விழா


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இளநிலை வேளாண் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘அக்ரோநோவா 17’ பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில், வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. 

இவ்விழாவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பழங்கால அரிய வேளாண்பொருட்கள் கொண்ட வேளாண் அறிவியல் கண்காட்சியும், இக்கால வேளாண் தொழில்நுட்ப மாதிரிகளும் பங்கேற்பாளர் பார்வைக்கு வைக்கப்பட இருக்கின்றன. 

மேலும், இந்நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் மாணவ மாணவியர் அறிவு மற்றும் சிந்தனைத் திறனைத் தூண்டும்விதமாக பற்பல போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இதில், பங்கேற்கும் அனைத்து மாணவ மாணவியருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. 

இதன் ஒரு பகுதியாக வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து விஞ்ஞனிகளை அழைத்து வேளாண் விழிப்புணர்வு பற்றிய சிறப்புரைகளும் வழங்கப்பட உள்ளன. இவ்விழாவின் மூலமாக வேளாண்மையின் பழமையினை இளைய சமுதாயத்திற்கு உணர்த்தி அதன் இன்றைய நிலைபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, பங்கேற்கும் ஒவ்வொரு இளைய தலைமுறைக்கும் வேளாண்மை என் தலையாய கடமை என்னும் விதையினை மனதில் ஊன்ற அக்ரோநோவா 17 ஒரு அற ஆயுதமாக செயல்படும் என நம்பப்படுகிறது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...