கோவையில் குடிபோதையில் செல்ஃபோன் டவரில் ஏறி வாலிபர் ரகளை

கணபதி சாலையில் உள்ள செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. போதையில் உள்ள அந்த நபரை மீட்க தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் தீவிரமாக போராடி வருகின்றனர்.



கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள ஜியோ செல்போன் டவர் மீது ஏறிய ஒரு வாலிபர், குடிபோதையில் தற்கொலை மிரட்டல் விடுத்து வருவதால், போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இன்று யாரும் எதிர்பாராத விதமாக, திடீரென, குடிபோதையில் இருந்த வாலிபர் கணபதி பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை தடுக்க வேறொரு டவர் மீது ஏறி உள்ளார்.



மெல்ல மெல்ல டவரின் உச்சிக்கே சென்ற அந்த நபர், தற்போது டவரின் நட்டு, போல்டுகளை கழற்றி கீழே எரிந்து வருகிறார்.



அது மட்டுமின்றி டவரின் உச்சி பகுதியில் உள்ள ஆண்டனாவை ஆட்டியும் ரகளையில் ஈடுபட்டு வருகிறார். டவரின் மீது இடி தாங்கி, ஆண்டனா அகற்றப்பட்டு உடல் முழுவதும் அந்த நபர் கீறி வருகிறார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், போதையில் உள்ள அந்த வாலிபரை மீட்க போராடி வருகின்றனர். தற்கொலைக்கு முயன்று மிரட்டல் விடுத்து வரும் அந்த வாலிபரின் பெயர் பிரபாகரன் என்று கூறப்படுகிறது. மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் இந்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றார் என்று கூறப்படுகிறது.



தன் குடும்ப பிரச்சனையை கூறி புலம்பி வரும் அந்த நபர், பொண்டாட்டி வேண்டும், கலெக்டர வர சொல்லுங்க என்று தெரிவித்து கத்தி கூச்சலிட்டு வருகிறார்.

காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் நபரை பாதுகாப்புடன் மீட்க போராடி வருகின்றனர். விஷயத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்தில் ஒன்று கூடி வருவதனால், கணபதி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...