குட்கா, சிகரெட்டுக்கு அடிமையானதை பெற்றோர் தட்டிக்கேட்டதால் - கோவையில் 13 வயது சிறுவன் தற்கொலை..!

கோவை சவுரிபாளையத்தில் குட்கா, புகைப்பழக்கத்திற்கு அடிமையான சிறுவனை பெற்றோர் தட்டி கேட்டதால் 13 வயது சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத போது தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தால் பரபரப்பு.


கோவை: கோவை மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுவனின் தந்தை சவுரிபாளையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது கடை ஒன்றில் அச்சிறுவன் குட்கா, சிகரட்டை வாங்கி வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் சிகரெட் மற்றும் குட்காவுக்கு அடிமையானதால் சிறுவன் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் தந்தை சிறுவனை கண்டித்து, புகை மற்றும் குட்கா பழக்கத்தை விடும்படி வலியுறுத்தி உள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த சிறுவன் வீட்டிற்கு சென்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சிறுவனின் தந்தை போலீசில் புகார் தந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குட்கா, சிகரெட் போன்ற புகையிலை பழக்கத்திற்கு அடிமையான சிறுவனை பெற்றோர் தட்டி கேட்டதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...