கோவை விளாங்குறிச்சியில் விடுதி முன்பு நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு..!

விளாங்குறிச்சியில் உள்ள ஷீலா அபார்ட்மெண்ட் குடியிருப்பின் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



கோவை: கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் ஷீலா அப்பார்ட்மெண்ட் என்ற கட்டிடத்தின் பார்க்கிங் பகுதியில் அந்த குடியிருப்பில் வசிப்பவர்களின் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று அதிகாலை பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 6 இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த குடியிருப்பில் வசிப்பவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த கோவில் பாளையம் போலீசார் இருசக்கர வாகனங்கள் தீக்கிரையான சம்பவம், தீ விபத்தா அல்லது தீ வைத்து எரிக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனைதொடர்ந்து, தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் இருசக்கர வாகனத்தின் பேட்டரியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு பக்கத்தில் இருந்த வாகனங்களுக்கு பரவி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த தீவிபத்து சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...