ஏற்றிய தீபத்தை காட்டிலும் ஏற்றிவைத்த தீக்குச்சி உன்னதமானது - கோவையில் நல்லாசிரியர் ரவிக்குமார்

கோவை தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் பங்கேற்ற நல்லாசிரியர் ரவிக்குமார், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான மரியாதை, பொறியியலின் முக்கியத்துவம் மற்றும் வளர்ச்சி குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வருகையை முன்னிட்டு வரவேற்பு விழா கல்லூரி கலையரங்கத்தில் நேற்றைய தினம் (21.11.2022) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.

இந்த வரவேற்பு விழாவில், கல்லூரி முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் பொறியியல் எனும் தொழிற்கல்வியை செயல்முறையில் கற்பது மிக முக்கியம் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வரவேற்றார்.



இதனை தொடர்ந்து முதலாமாண்டு துறைத்தலைவர் முனைவர்.சிவமணி, மாணவர்கள் எந்த நேரத்திலும் அவர்களுடைய‌ தேவைகள் மற்றும் உதவிகளை ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

இதனையடுத்து, இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்கள் தங்கள் கல்லூரி அனுபவங்களை முதலாமாண்டு மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டனர். கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் மாணவர் கேசவமூர்த்தி, தொழில்நுட்ப வளர்ச்சியும் அதை எப்படி கையாள்வது என்பது குறித்து பேசினார்.

இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, 2022 ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர் ரவிக்குமார் பேசியதாவது, ஏற்றிய தீபத்தை காட்டிலும் ஏற்றிவைத்த தீக்குச்சி உன்னதமானது. ஆசிரியர்களை தீக்குச்சி என்று புகழ்ந்தார்.

சொந்தங்களை விட நட்பு பெரியது எனக்கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். மாணவர்களுக்கு தாய் மொழி அறிவு அவசியம். அது மட்டுமல்லாமல் தன்னுடைய நகைச்சுவை மிக்க பேச்சால் கலையரங்கத்தில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்தார்.

இறுதியாக கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் Dr. அனுஷா ரவி கூறியதாவது, மாணவர்களின் பாதுகாப்புக்கு கல்லூரி முக்கியத்துவம் தருகிறது. மாணவர்கள் பெற்றோருக்கு மதிப்பு தர வேண்டும், மாணவர்களே கல்லூரியின் மிகப்பெரிய சொத்து.

இக்கல்லூரியில் படித்த பலர் தொழிலதிபர்களாகவும், வெளிநாடுகளில் நல்ல நிலையில் இருக்கின்றனர். உங்கள் வாழ்க்கையில் பொறியியல் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இல்லை. பொறியியலின் தேவை மற்றும் அதனின் வருங்கால வளர்ச்சி குறித்தும் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...