கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளை ஆய்வு செய்த கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி.அருண்குமார்

கோவை - மேட்டுப்பாளையம் சாலை ஜி.என்.மில்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆய்வு செய்து, சாலை செப்பனிடும் பணிகள் குறித்து பொறியாளரிடம் கேட்டறிந்தார்.



கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் அருகே மேம்பாலம் சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.



இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம் ஆகிய இடங்களில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில் ஜி.என். மில்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, மேம்பால பணிகளையும் அங்குள்ள சாலைகளையும், பாதசாரிகள் பயன்படுத்தும் நடைமேடைகளையும் பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் சாலைகள் செப்பனிடும் பணிகள் குறித்தும் பொறியாளர்களிடம் கலந்தாலோசித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...