கோவை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவை தம்பாகவுண்டம்பாளையம் பகுதி அருகே கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தி செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன. அவ்வாறு கடத்தப்படும் அரிசியை குடிமை பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ஒத்தக்கால்மண்டபம் - வேலந்தாவளம் சாலையில் உள்ள தம்பாகவுடன்பாளையம் பகுதியில் குடிமை பொருள் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தனியார் நிலத்தில் மூட்டை மூட்டையாய் ரேசன் அரிசி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், கடத்த முயன்ற மதுக்கரையை சேர்ந்த காசிமாயன் என்பவரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை குடோனுக்கு அனுப்பி வைத்த போலீசார்,கைது செய்யப்பட்ட காசிமாயனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...