கோவை கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியில் முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது

கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியில் இன்று நடைபெற்ற முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி அரங்கில்‌ மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கு.ஞானசம்பந்தம்‌ மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை கற்பகம்‌ பொறியியல்‌ கல்லூரியில் இன்று முதலாமாண்டு பொறியியல்‌ மாணவர்களுக்கான வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ தலைவர்‌ முனைவர்‌ இரா.வசந்தகுமார்‌ தலைமை தாங்கினார்‌. கல்லூரியின்‌ முதல்வர்‌ முனைவர்‌ விஜயகுமார்‌ அனைவரையும்‌ வரவேற்றார்‌.



இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக உலகறிந்த தமிழறிஞர்‌ முனைவர்‌ கு. ஞானசம்பந்தம்‌ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்‌. அவர்‌ தனது உரையில்‌ இன்றைய மாணவர்கள்‌ கல்வியையும்‌ ஒழுக்கத்தையும்‌ இரு கண்களாக கருத வேண்டும்‌ என்று கூறினார்‌.

மேலும்‌ அவர்‌ தனது உரையில்‌ பொறியாளர்கள்‌ தான்‌ இந்த நாட்டை உருவாக்குகிறார்கள்‌, இயந்திரவியல்‌ போன்ற பல்வேறு துறைகளில்‌ நம்‌ நாடு மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாகக்‌ கூறினார்‌. எல்லோருக்கும்‌ எல்லாவிதமான வாய்ப்புகள்‌ கிடைப்பதில்லை ஆனால்‌ இந்த அளவிற்கு ஒரு பெரிய கல்லூரியில் படிக்கிறோம்‌ என்றால்‌ அதற்குக்‌ காரணம்‌ பெற்றோர்கள்‌ அவர்களைப் போற்றி வணங்க வேண்டும்‌ என்றார்‌.

நான்காண்டு என்பது நான்கு நிமிடங்கள்‌ போல ஓடிவிடக்கூடியது ஆகையால்‌ கவனச்சிதறல் இல்லாமல்‌ கற்க வேண்டும்‌ என்றும்‌ மிகப்‌ பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தவர்களும்‌ சாதாரண நிலையில்‌ இருந்து வந்தவர்கள்‌தான் ஆகையால்‌ நீங்களும்‌ பல புதுப்‌ புது கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்‌ என்றும் நம்பிக்கையூட்டினார்.



1200 மாணவர்கள்‌ கலந்துகொண்ட இவ்விழாவின்‌ நிறைவாக கல்லாரியின்‌ முதலாமாண்டு மாணவர்கள்‌ துறைத்தலைவர்‌ முனைவர்‌ விஜயகுமார்‌ நன்றி கூறினார்‌.



இந்த விழாவில்‌ கற்பகம்‌ கல்வி நிறுவனங்களின்‌ மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ முனைவர்‌. ஆதி பாண்டியன்‌ துறைத்தலைவர்கள்‌, பேராசிரியர்கள்‌, மாணவர்களின்‌ பெற்றோர்கள்‌ மற்றும்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...