கோவையில் வள்ளலார் முப்பெரும் விழா: பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு வள்ளலார் குறித்த இலக்கிய போட்டிகள்

வள்ளலார் முப்பேரும் விழாவை முன்னிட்டு கோவையில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை, உள்ளிட்ட பல்வேறு இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் வரும் டிசம்பர் 4-ல் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.


கோவை: வள்ளலார் பிறந்தநாள், வள்ளலார் தர்மசாலா தொடங்கியதன் 156-ம் ஆண்டு விழா, வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டிய 152-ம் ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 5ம் தேதி தொடங்கி 52 வாரங்களுக்கு “வள்ளலார் 200” என்ற தலைப்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே வள்ளலார் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வள்ளலார் பிறந்தநாள் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு இலக்கிய மற்றும் கலை நிகழ்ச்சி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் புது சித்தாபுதூர் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவில் மண்டபத்தில் வள்ளலார் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி பாட்டு போட்டிகள் என பல்வேறு இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.



வள்ளலார் மற்றும் அவரது வாழ்வியல் சம்பந்தமான தலைப்புகளில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்குவருகின்ற நான்காம் தேதி அரசு சார்பில் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...