கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை - ஜெர்மனியுடன் இணைந்து பருவநிலை மாற்றம், பயிர் சேதம் குறித்து ஆராய்ச்சி

காலநிலைக்கு ஏற்றார்போல் பயிர் காப்பீடு செய்வது எப்படி? தண்ணீரை குறைத்து அதிக மகசூல் பெறுவது எப்படி? என்பது குறித்த ஆராய்ச்சிகள் ஜெர்மன் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாக பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி தகவல்.



கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் ஜெர்மன் நாட்டுடன் இணைந்துமாறிவரும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பயிர் சேதம் மற்றும் இழப்பீடு தொடர்பாக ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது.



இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது, பருவநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகள், பேரிடர் காலங்களில் ஏற்படும் பயிர் சேதங்களை செயற்கைகோள் தொழில்நுட்பம் மூலமாகவும், தொழில் நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை திரட்டுவதன் மூலம் விவசாயிகளுக்கு உரியநிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் நோக்கம் காலநிலை மாற்றம் காரணமாக பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்வது. பயிர் பாதுகாப்பு திட்டங்கள், தனிநபர் விவசாயத்திற்கும் செயல்படுத்த ஏதுவாக அமையும். மண், தண்ணீர், பயிர் நிலை குறித்த தகவல்களை செல்பேசி வாயிலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காலநிலைக்கு ஏற்றார்போல் பயிர் காப்பீடு செய்வது எப்படி என்பதை ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்படுத்த உள்ளோம். இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை கையாள்வது எப்படி மற்றும் அதற்கான வழிமுறைகளை தெரிவிப்பது போன்ற திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.

தண்ணீரை குறைத்து அதிக மகசூல் பெறும் வகையில் திட்டங்களை வகுக்கப்பட உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு குறைந்த விலையில் உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 1000 விவசாயிகளுடன் தொடர்பில் இருந்து கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...