திருப்பூரில் நண்பர் பிரிந்த துக்கம் தாளாமல் பேருந்து முன்பு விழுந்து முதியவர் தற்கொலை - சிசிடிவி காட்சியால் பரபரப்பு

மன்னரை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது நண்பர் ஒரு வாரத்துக்கு முன்பு உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் தனியார் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மன்னரை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (75). இவர் தனது நண்பருடன் தினமும் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில், சுப்பிரமணியின் நண்பர் கடந்த வாரம் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சுப்பிரமணி கடந்த ஒரு வாரமாக சோகத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை சுப்பிரமணி தனியாக நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...