கோவை கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிப்பொழிவு காரணமாக கோவை - பொள்ளாச்சி இடையேயான நான்கு வழிச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே மெதுவாக சென்ற நிலையில், 8 மணிக்கு மேலும் பனி விலகாததால் வாகன ஓட்டிகள் அவதி.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயிலும் இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

பனிப்பொழிவு காரணமாக கோவை - பொள்ளாச்சி இடையேயான நான்கு வழிச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டங்கள் சாலையை மறைத்தவாறு இருந்தன.

இதனால் நான்கு வழிச்சாலை வழியாக கோவை பொள்ளாச்சி சென்ற இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே மெதுவாகவே பயணித்தன.

மேலும் காலை 8 மணிக்கு மேலாகவும் இயல்பு நிலைக்கு திரும்பாததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...