கோவையில் இருந்து வெடிப்பொருள் தயாரிக்கும் மூலப்பொருட்களை ஆன்லைனில் வாங்கிய இளைஞர் கைது

கோவில்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (26) என்பவர் ஆன்லைன் மூலம் வெடிபொருள் தயாரிக்கும் மூலப்பொருட்களை ஆடர் செய்த நிலையில், சரவணம்பட்டி போலீசார் 1908-வெடி பொருள் சட்டப்பிரிவு 4(b) கீழ் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.


கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஆன்லைனில் பொட்டாசியம் உள்ளிட்ட மூலப்பொருட்களை வாங்கும் நபர்களை மாநகர போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் ஆடர் செய்த மாரியப்பன் என்பவரை கண்காணித்து வந்த போலீசார், அவர் ஆர்டரை வாங்கும் போது அவரை மடக்கி பிடித்தனர். பின்னர், மாரியப்பனை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், மாரியப்பன் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், மேலும், மாரியப்பன் தனது எதிரியான மகாராஜன் என்பவரை கொலை செய்ய போடப்பட்ட திட்டத்திற்காக தான் ஆன்லைன் மூலம் வெடி பொருட்களை வாங்கியதும் தெரியவந்தது.

விசாரணைக்கு பின்னர், மாரியப்பன் மீது சரவணம்பட்டி போலீசார் 1908-வெடி பொருள் சட்ட பிரிவு 4(b) இன் (Explosive act) கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். தற்போது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...