கோவை மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி விசாரணை

பொதுமக்களிடம் சேவை சார்ந்த பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை 10 மணி முதல் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஎஸ்பி திவ்யா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை மலுமிச்சம்பட்டியில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்தில் இன்று காலை 10 மணி முதல் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டிஎஸ்பி திவ்யா தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்களிடம் சேவை சார்ந்த பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த விசாரணை என்பது நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வரும், போர்மேன் சங்கர் கணேஷ் மற்றும் உதவி பொறியாளர் சுப்பிரமணியம் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...