சதுரங்க வேட்டை பட பாணியில் மோசடி - திருப்பூரில் ரியல் எஸ்டேட் புரோக்கர் உட்பட இருவர் கைது

பல்லடம் அருகே குத்தகைக்கு வீடு பிடித்து தருவதாக கூறி பலரிடம் லட்ச கணக்கில் மோசடி செய்த ரியல் எஸ்டேட் புரோக்கர் உட்பட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: பல்லடம் மங்கலம் சாலை பகுதியில் வசித்து வருபவர் நவாஸ். இவர் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பல்லடம் பகுதியில் பல இடங்களில் வீடு வாங்க விற்க, வாடகைக்கு, அழைக்கவும் என கூறி அவரது தொலைபேசி என்னுடன் கூடிய விளம்பர சுவரொட்டியை ஒட்டி விளம்பரபடுத்தியுள்ளார்.

இதனையடுத்து வீடு விலைக்கு வாங்கவும், வாடகைக்கும், குத்தகைக்கும் என பலரும் தொடர்பு கொண்டுள்ளனர். இதனையடுத்து தன்னை தொடர்பு கொள்ளும் மக்களிடம் மிக குறைந்த விலையில் அழகிய வீடுகள் உள்ளதாக ஆசை வார்த்தை கூறி வந்துள்ளார்.

இதனையடுத்து பல்லடம் மின்நகர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள ஒரே வீட்டை தன்னிடம் வீடு கேட்டு வரும் நபர்களுக்கு காண்பித்து குத்தகைக்கு உள்ளது என்றும் 3 லட்சம் ரூபாய் கொடுத்தால் உடனடியாக குடியமரலாம் எனவும் கூறி வந்துள்ளார்.

மேலும் யாரோ ஒருவர் வீட்டின் உரிமையாளராக இருக்க நவாஸ் செட்டப் செய்த நபரை காண்பித்து இவர்தான் வீட்டின் உரிமையாளர் என கூறி வந்ததாக கூறப்படுகிறது.



இதை நம்பி 40 மேற்பட்ட நபர்கள், அவரிடம் 1 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை முன் தொகையாக கொடுத்துள்ளனர்.

வீடு கேட்டு வருபவர்களிடம் முன் தொகையை பெற்று கொண்டு ஒரு சில நாட்களில் கம்பி நீட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நவாஸ். வீடு வாங்கி தருவதாகவும், குத்தகைக்கு பிடித்து தருவதாகவும் கூறி பல நபர்களிடம் லட்ச கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

நவாஸிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த சிலர் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த நவாஸை பாதிக்கப்பட்ட நபர்கள் பிடித்து பல்லடம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்து ஒவ்வொருவராக புகார் அளித்து வருகின்றனர்.



வீட்டின் உரிமையாளராக நடித்த ரங்கராஜ் என்பவரையும் கைது செய்த போலீசார், மேலும் எவ்வளவு பணம் அவர்கள் ஏமாற்றியுள்ளனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏமாற்றிய பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் எனவும் தங்களை போல் இனி யாரும் ஏமாறாமல் இருக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...