மானாவாரி நிலத்திலும் மரம்‌ வளர்த்து லாபம் ஈட்டலாம் - காவேரி கூக்குரல்‌ இயக்கம் சார்பில் விருதுநகரில் நவ-27-ல் கருத்தரங்கு

சாத்தூரில்‌ உள்ள ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில்‌ நடைபெறும்‌ சிறப்பு கருத்தரங்கில்‌ பல்வேறு முன்னோடி விவசாயிகளும்‌, விஞ்ஞானிகளும்‌ பங்கேற்று பேச உள்ளதாக காவேரி கூக்குரல் இயக்கம் தெரிவித்துள்ளது.


மதுரை: காவேரி கூக்குரல்‌ இயக்கம்‌ சார்பில்‌ மானாவாரி நிலங்களில்‌ மரப்‌ பயிர்‌ சாகுபடி செய்து நல்ல லாபம்‌ ஈட்டுவது தொடர்பான கருத்தரங்கு விருதுநகரில்‌ நவம்பர்‌ 27-ம்‌ தேதி நடைபெற உள்ளது. இதில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ இருந்து ஆயிரத்துற்கும்‌ மேற்பட்ட விவசாயிகள்‌ பங்கேற்க உள்ளனர்‌.

இது தொடர்பான பத்திரிக்கையாளர்‌ சந்திப்பு மதுரை செய்தியாளர்‌ அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ மாநில கள ஒருங்கிணைப்பாளர்‌ தமிழ்மாறன்‌ பேசியதாவது: தமிழகத்தில் சுமார்‌ 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு மானாவாரி நிலமாக உள்ளதாக கூறினார்.



மழையை மட்டுமே நம்பி விவசாயம்‌ செய்யும்‌ இப்பகுதி விவசாயிகள்‌ தங்கள்‌ நிலங்களில்‌ மண்ணுக்கேற்ற மரங்களை சாகுபடி செய்தால்‌ அதன்‌ மூலம்‌ நல்ல வருவாய்‌ ஈட்ட முடியும் என தெரிவித்தார்.

குறிப்பாக, சந்தனம்‌, செம்மரம்‌, போன்ற விலைமதிப்புமிக்க மரங்கள்‌ வறட்சியை தாங்கி வளரும் திறன் கொண்டவை என்று கூறிய அவர், இம்மரங்களை வளர்க்க வறண்ட பகுதிகளில்‌ பெய்யும்‌ 6 - 8 சதவீத மழைநீரே போதுமானது என்றும் தெரிவித்தார்.

இம்மரங்களை வழக்கமாக செய்யும்‌ பயிர்களுடன்‌ நடவு செய்யலாம்‌ அல்லது இம்மரங்களை மொத்தமாக நடவு செய்து மானாவாரி நிலத்தில்‌ ஒரு தோப்பையே உருவாக்கலா என்று தமிழ்மாறன் கூறினார்.

மத்திய அரசு முன்னேற்றத்தை நாடும்‌ மாவட்டங்கள் என இந்தியாவில்‌ 117 மாவட்டங்களை கேர்ந்தெடுத்துள்ளதாக கூறிய அவர், அதில்‌ தமிழகத்தின்‌ வறட்சி மாவட்டங்களான ராமநாதபுரம்‌ மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்களும்‌ அடங்கும் என குறிப்பிட்டார்.

எனவே மானாவாரி விவசாயிகளுக்கு என பிரத்யேகமாக வரும் 27-ஆம் தேதி விருதுநகரில் சிறப்பு கருத்தரங்கை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக கூறிய அவர், சாத்தூரில்‌ உள்ள ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில்‌ நடைபெறும்‌ இக்கருத்தரங்கில்‌ பல்வேறு முன்னோடி விவசாயிகளும்‌, விஞ்ஞானிகளும்‌ பங்கேற்று பேச உள்ளதாக கூறினார்.

குறிப்பாக, ஓய்வு பெற்ற வேளாண்‌ இணை இயக்குநருமான ராமமூர்த்தி வேப்ப மரத்தில்‌ இருந்து லாபம்‌ எடுக்கும்‌ வழிமுறைகளை கருத்தரங்கில் பகிர உள்ளதாகவும் தமிழக அரசின்‌ சிறப்பு திட்ட செயலாக்க துறையின்‌ வேளாண்‌ பொறியாளர்‌ பிரிட்டோராஜ்‌ 'கொடுக்காப்புளி' மர வளர்ப்பு குறித்தும்‌, பெங்களூருவில்‌ உள்ள மர அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்ப நிறுவனத்தின்‌ விஞ்ஞானி சுந்தரராஜன்‌ சந்தன மர வளர்ப்பு குறித்தும் இக்கருத்தரங்கில் பேச இருப்பதாகவும் தமிழ்மாறன் தெரிவித்தார்.

இதுதவிர, நாவல்‌, செம்மரம்‌, நாட்டு வாகை, பலா மா வளர்ப்பு குறித்தும்‌ முன்னோடி விவசாயிகள்‌ பேச உள்ளதாக கூறிய அவர், இக்கருத்தரங்கில்‌ பங்கேற்க விரும்பும்‌ விவசாயிகள்‌ 9002590079 என்ற எண்ணில்‌ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்‌ என்றும் கூறினார்.

தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள ஈஷா நாற்றுப்‌ பண்ணைகளில்‌ விவசாயிகள்‌ பயன்‌ பெறும்‌ விதமாக அனைத்து வகையான டிம்பர்‌ மரக்கன்றுகளும்‌ 3 ரூபாய்க்கு விநியோகம்‌ செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...