ஈச்சனாரியில் தனியார் நர்சிங் கல்லூரி பொது செவிலியர் மற்றும் தாதியர் படிப்பு மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

தரச்சான்றிதழ் உள்ளது என்று கூறி கல்லூரி நிர்வாகம் தங்களை ஏமாற்றியதாக கூறி 3 நாட்களாக அபிராமி நர்சிங் கல்லூரி மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை ஈச்சனாரி அருகே செயல்பட்டு வரும் அபிராமி நர்சிங் கல்லூரியில், பி.எஸ்.சி நர்சிங் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் கூடுதலாக GNM (பொது செவிலியர் மற்றும் தாதியர்) புதிய படிப்பை இணைத்துள்ளனர். இதில், கேரளா மற்றும் தமிழக மாணவ, மாணவிகள் படித்து வந்தாலும், பெரும்பாலானோர் கேரளாவை சேர்ந்த மாணவிகளே பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், இக்கல்லூரியில் பொது செவிலியர் மற்றும் தாதியர் படிப்பை முடித்த மாணவர்களுக்கு INC என்ற வெளிநாட்டிற்கு சென்று பணியாற்றும் தகுதிச் சான்றிதழ் கல்லூரி நிர்வாகம் வழங்காமல் இருந்ததாக தெரிகிறது.



விசாரணையில், அந்த தரச்சான்றிதழ் அக்கல்லூரியில் இல்லை என தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவ, மாணவிகள், தங்களை ஏமாற்றி கல்லூரியில் சேர்ந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நடப்பு ஆண்டில் அந்த படிப்பில் சேரந்தவர்கள் தங்கள் கட்டணம் மட்டும் சான்றிதழை திரும்ப தர வலியுறுத்தி போராடி வருகின்றனர்.



கடந்த 4 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து வரும் மாணவிகள், சுகாதாரத்துறை மற்றும் மதுக்கரை போலீசில் புகாரும் அளித்துள்ளனர். ஆனாலும், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதால், அக்கல்லூரி மாணவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தனர்.



3 நாட்களாக போராடி வரும் மாணவிகள், உடனடியாக அவர்களது மனு மீது நடவடிக்கை எடுத்து சான்றிதழ் கட்டணம் மற்றும் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...