கோவை ஸ்மார்ட் சிட்டி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றிய தேசிய மாணவர் படையினர்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டி பகுதியில் உள்ள வாலாங்குளம் குளக்கரையில் இருந்த குப்பைகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய மாணவர் படையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாநகர பகுதியை சேர்ந்த பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த என்சிசி மாணவர்கள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக இன்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உள்ள வாலாங்குளம் குளக்கரையில் இருந்த குப்பைகளை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய மாணவர் படை மாணவ - மாணவிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை பயன்படுத்த வேண்டாம், குப்பைகளை குப்பை தொட்டில் போட வேண்டும், சுற்றுச்சூழலை பேணி காக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...