சமூக வலைதளங்களில் பரவிய ஆடியோ: பாஜக மூத்த தலைவர்கள் முன்பு சுமூக முடிவு என திருச்சி சூர்யா சிவா - டெய்சி திருப்பூரில் கூட்டாக பேட்டி

சமூக வலைதளங்களில் பரவிய ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள் முன்னிலையில் பரஸ்பரம் சுமூகமாக முடித்துக் கொள்ளப்பட்டது என்றும் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் திருச்சி சூர்யா சிவா மற்றும் டெய்சி பேட்டி.


திருப்பூர்: பாஜகவின் ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவரான திருச்சி சூர்யா சிவா மற்றும் பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி ஆகியோர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை சூர்யா சிவா குறிப்பிட்ட நாட்கள் கட்சி நிகழ்வில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

மேலும் மாநில துணைத்தலைவரான கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் திருப்பூரில் இரு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று காலை திருப்பூர் வித்யாலயம் பகுதியில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கனகசபாவதி தலைமையில் இரு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்றது. இதில் டெய்சி மற்றும் சூர்யா சிவா இருவரும் ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளித்திருந்தனர்.



பின்பு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி பேசியதாவது, பாஜகவின் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்டு பாஜக கட்சியில் சேர்ந்தேன். கண் பட்ட நிகழ்வு போல ஒரு அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விட்டது.

சூர்யா சிவா தனக்கு தம்பி போல தான். உணர்ச்சி வசப்பட்டு பேசிய வார்த்தைகள் அரசியல் காரணங்களுக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து விட்டது.

மாநில தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலின்படி கட்சியின் மூத்த தலைவர்கள் கனகசபாபதி மற்றும் மலர்க்கொடி முன்னிலையில் இரு தரப்பும் பரஸ்பரம் சுமூகமாக பிரச்சனையை முடித்துக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் சூர்யா சிவா பேசியதாவது, நான் பேசியது தவறு தான். இதற்காக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன். மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன்பு எழுத்துப்பூர்வமாக எனது விளக்கத்தையும் அளித்துள்ளேன்.

தன் மீது நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்றுக் கொள்வேன். செல்போனில் பேசிய தங்கள் இருவரிடமிருந்தும் இந்த ஆடியோ வெளியே செல்லவில்லை. அரசியல் காரணங்களுக்காகவே இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டுள்ளது.

பாஜக மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு களங்கம் விளைவிக்கவே இது தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. திமுகவில் சைதை சாதிக் மீது காவல்துறையில் புகார் அளித்தும் கூட கட்சி சார்ந்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், பாஜக உடனடியாக நடவடிக்கை எடுத்ததோடு ஒழுங்கு நடவடிக்கை குழு அமைத்து விசாரிக்கவும் உத்தரவிட்டது. இப்பிரச்சனையை இதோடு இருவரும் பரஸ்பரம் முடித்துக் கொள்ளப்பட்டது. எங்கள் இருவருக்கும் குடும்ப ரீதியான நட்பு தொடர்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...