நான் தான் டெங்கு..! உனக்கு ஊதுவேன் சங்கு..! - கோவையில் டெங்கு குறித்து நூதன விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நபர்..!

டெங்கு கொசு போன்று வேடமணிந்து, "பஞ்ச் டயலாக்" அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சம்பத் என்ற தனி நபர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.


கோவை: மழைக்காலம் வந்தாலே அழையா விருந்தினராக வருபவை சளி, இருமல், உடல் வலி மற்றும் வகை வகையான காய்ச்சல்கள். ஒரு புறம், நீரால் பரவும் காய்ச்சல் மற்றும் வயிற்று போக்கு ஏற்படக்கூடும் உபாதைகள், மறு புறம் கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்கின்குனியா போன்ற காய்ச்சலால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக, ஏடிஸ் என்ற கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள், பெரியவர்கள் என்று அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மழைகாலங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொண்டால், நோய் பரப்பும் கொசுக்களின் உற்பத்தியை வெகுவாக குறைத்து விடலாம். எனவே, சுகாதாரத்தை மேம்படுத்த சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது மிக அவசியம் என்று மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நான் தான் டெங்கு... உனக்கு ஊதுவேன் சங்கு...!

நல்லதை யார் சொன்னாலும் என்ன என்பது போல், கோவையில் சம்பத் என்ற தனிநபர் டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை காப்பாற்ற நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.



டெங்கு கொசு போன்று வேடமணிந்து, "பஞ்ச் டயலாக்" அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சம்பத் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.



குறிப்பாக நகரின் முக்கிய பகுதிகளில் உலா வரும் இவர், தன் கழுத்தில் "நான் தான் டெங்கு....உனக்கு ஊதுவேன் சங்கு...! என்ற வாசகம் அடங்கிய பதாகையை கழுத்தில் தொங்கவிட்டப்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

அதேபோன்று, டெங்கு போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உருவாகும் இடங்களான கொட்டாங்குச்சி, மரங்களுக்கு ஊற்றும் தண்ணீர் தெங்குவது, ஒழுங்காக மூடி வைக்காத பாத்திரங்கள், தொட்டிகள் போன்ற பொருட்களை கொண்டு மாலை தயாரித்து அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

தண்ணீர் தேங்கும் பொருட்களை முறையாக அப்புறப்படுத்தினால், நோய் பரப்பும் டெங்கு போன்ற கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுத்துவிடலாம் என்று மக்களிடையே டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சம்பத்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

வெறும் பாராட்டோடு நின்று விடாமல், டெங்குவை ஒழிக்க தனி மனிதனின் பங்களிப்பு மற்றும் சமூக பொறுப்பு மிக முக்கியம் என்பதை பொதுமக்கள் உணர்ந்தாலே, டெங்கு இல்லா கோவை என்ற இலக்கை நாம் நிச்சயம் அடைந்துவிடலாம் என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...