கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கோவை மாநகர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 11 பெண்களுக்கு தையல் இயந்திரம், 4 பேருக்கு இஸ்திரிப்பெட்டி, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பெட்டிக்கடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


கோவை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையம் பகுதியில் நலத்திட்ட உதவிகள், பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.

கோவை மாநகர தலைவர் டேவிட் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 11 பெண்களுக்கு தையல் இயந்திரம், 4 பேருக்கு இஸ்திரிப்பெட்டி, மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பெட்டிக்கடை, கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவி தொகை வழங்குதல், அரசு பள்ளிக்கு குடிநீர் தொட்டி, அங்கன்வாடி குழந்தைகளுக்கு உணவு தட்டுகள் போன்றவை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...