கோவை சரவணம்பட்டியில் கல்லூரி மாணவர் அறையில் லேப்டாப்கள், ரூ.38,000 கொள்ளை - மர்ம நபர்கள் துணிகரம்

2 லேப்டாப்பகள் மற்றும் 38 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக பொறியியல் கல்லூரி மாணவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: சரவணம்பட்டி பகுதியில் ஆதித்யா கன்வென்சன் அருகே அறை எடுத்து தங்கி வருபவர் கபிலன். இவர் கே.ஜி.ஐ.எஸ்.எல். கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் தனது அறையில் வைத்திருந்த 2 லேப்டாப்கள் மற்றும் 38 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக சரவணம்பட்டி காவல் நிலையத்தில் மாணவர் புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பாம் சரவணம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...