குன்னூரில் தரமான பசுந்தேயிலை விற்பனை செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் - வனத்துறை அமைச்சர் பங்கேற்பு

நீலகிரி மாவட்டத்தில், தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்து விற்பனை செய்வது தொடர்பாக விவசாயிகள், விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலகத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை அதிகபடியான மக்கள் தேயிலை தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தரமான பசுந்தேயிலை கொள்முதல் செய்து, விற்பனை செய்வது தொடர்பாக விவசாயிகள், விற்பனையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் குன்னூர் இண்ட்கோசர்வ் அலுவலக கூட்டரங்கில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் தேயிலை வாரியத்தின் செயல் இயக்குனர் முத்துக்குமார், மாவட்ட ஆட்சியர் அம்ரித், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டாக்டர் மோனிகாராணா ஆகியோர் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:

தேயிலை தொழில் நலிவடைந்து வந்த காரணத்தினால் இது குறித்து கடந்த ஜூலை மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, அதிக இலாபத்தினை ஈட்டும் வகையில் பல்வேறு கருத்துக்கள் கேட்கப்பட்டு, ஆலோசனைகளும் வழங்கட்டதாக கூறினார்.

அதனை தொடர்ந்து ஜூலை மாதத்தில் தேயிலைக்கு 12.82 ரூபாயும், ஆகஸ்ட் மாதத்தில் 14.38 ரூபாயும், செப்டம்பர் மாதத்தில் 15.82 ரூபாயும், அக்டோபர் மாதத்தில் 16.21 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிப்படியாக தேயிலைக்கு நல்ல விலை கிடைக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அமைச்சர் ராமச்சந்திரன், விவசாயிகள் தரமான தேயிலைகளை தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் தரமான தேயிலை மூலமாக தரமான தேயிலை தூள் தயாரித்து விற்பனை செய்ய முடியும் என தெரிவித்தார்.



இக்கூட்டத்தில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், இண்ட்கோ சர்வ் பொது மேலாளர் குமரகுருபன், துணை பொது மேலாளர்கள் சங்கர நாராயணன், தேயிலை விற்பனையாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...