பல்லடத்தில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அலுவலர் கைது

பல்லடத்தில் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்தவரிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: திண்டுக்கல் ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் பசும்பொன் தேவி. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே பல்லடம் அடுத்த வருவாய் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது இரு மகள்களுக்காக சமூக நலத்துறை சார்பில் தமிழக அரசால் வழங்கப்படும் பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற வேண்டி பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தி விண்ணப்பித்துள்ளார்.



ஆனால் பணியை செய்வதற்காக அலுவலர் பசும்பொன்தேவி, 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

லஞ்சப் பணத்தை கூகுல் பே மூலம் அனுப்புமாறு பசும்பொன்தேவி தெரிவிக்க, 1,500 ரூபாயை கூகுல் பே மூலமாகவும், எஞ்சிய தொகையான 1,500 ரூபாயை ரொக்கமாக தருவதாகவும் செந்தில்குமார் கூறியுள்ளார்.



லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி, பல்லடம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பசும்பொன் தேவியிடம் ரசாயனம் தடவிய, 1,500 ரூபாயை செந்தில்குமார் கொடுத்துள்ளார்.



அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் பசும்பொன் தேவியை கையும் களவுமாக பிடித்து விசாரணைக்காக பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக,செந்தில்குமாரிடம் பசும்பொன் தேவி பேசிய ஆடியோ, மற்றும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அதில், திட்டத்தில் இணைவதற்கான பத்திர செலவு உள்ளிட்ட வகையில், 3 ஆயிரம் செலவாகும் என்றும் மேற்படி தனக்கு ஏதாவது கொடுங்கள் என, பசும்பொன்தேவி வெளிப்படையாக செந்தில்குமாரிடம் கேட்கும் வீடியோ, மற்றும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...