கோவையில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் போலீஸ்..!

ஆன்லைன் மோசடியில் சிக்கி பணத்தை இழந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட மோசடி கணக்கை முடக்கி பணம் மீட்டு தரப்படும் என சைபர் கிரைம் போலீஸ் தகவல்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (54). இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.79 ஆயிரத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

இதேபோல் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த திருமுகம் (58). இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் வங்கியில் இருந்து கடன் வாங்கி தருவதாக கூறி இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.24, 500-ஐ மோசடி செய்துள்ளார்.

மேலும் வடவள்ளியை சேர்ந்த தர்மராஜ் (74). இவரை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட நபர், அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.80 ஆயிரமும், அன்னூர் பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலம் ரூ.49,874 மோசடி செய்துள்ளனர்.

இந்த 4 பேரின் வங்கி கணக்கில் இருந்து மொத்தம் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 674 மோசடி செய்யப்பட்டது.

இதுதொடர்பான புகாரின் பேரில், கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்கை போலீசார் முடக்கியுள்ளனர்.

இதனிடையே அந்த வங்கி கணக்கில் இருந்த மோசடி பணம் ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்தை மீட்டுள்ளனர். இதையடுத்து அந்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.



இதில் போலீஸ் எஸ்.பி பத்ரிநாராயணன் கலந்து கொண்டு உரியவர்களிடம் பணத்தை ஒப்படைத்தார்.



இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது,

ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் பண மோசடி நடைபெற்றால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.

அவ்வாறு புகார் அளித்தால் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கை முடக்கி, மோசடி செய்ய கணக்கில் இருக்கும் பணம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...