நீலகிரி உதகை அருகே கடைகளை உடைத்து சேதப்படுத்திய கரடிகள் - பொதுமக்கள் அச்சம்..!

உதகை அடுத்த கல்லட்டி பகுதியில் புகுந்த 2 கரடிகள் அங்குள்ள டீ கடை உள்ளிட்ட 3 கடைகளை உடைத்து சேதப்படுத்திய நிலையில், அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், உடனடியாக கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் கரடிகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி உலா வரும் கரடிகள், உணவு தேடி வீடுகளுக்குள் புகுந்து விடுவதால், பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் உதகை அடுத்த கல்லட்டி பகுதிக்குள் இன்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 கரடிகள், அடுத்தடுத்து 3 கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சேதபடுத்தி உள்ளன.



முதலில் டீ கடைக்குள் புகுந்த கரடிகள் பாத்திரங்களையும் உணவு பொருட்களையும் வெளியில் எடுத்து வந்து சேதப்படுத்தி உள்ளன.



இதனையடுத்து அந்த கரடிகள் வீடு வீடாக உணவு தேடி சென்றதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனிடையே கரடிகள் கடைகளுக்குள் சென்று வெளியில் வந்து சுற்றித்திரிந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பொது மக்களை அச்சுறுத்தி வரும் 2 கரடிகளையும் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என உதகை வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...