கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ சிறப்பு மருத்துவ முகாம் - கோவை மாநகராட்சி ஆணையர், மேயர் தொடங்கி வைத்தனர்

கோவை மத்திய மண்டல மாநகராட்சி பள்ளியில் நடைபெறும் கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ சிறப்பு மருத்துவ முகாமில் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையர் பிரதாப் வேண்டுகோள்.


கோவை: கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்‌ “கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ சிறப்பு மருத்துவ முகாம்” நடைபெற்றது.

இந்த முகாமை கோவை மாநகராட்சி மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ ஆகியோர்‌ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, முகாமில்‌ நோயாளிகளுக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சை முறைகள்‌ குறித்து ஆய்வு செய்தனர்‌.

இந்த முகாமில்‌ மாநகராட்சி ஆணையர்‌ பேசியதாவது, தமிழக அரசின்‌ வரும்‌ முன்‌ காப்போம்‌ திட்டமானது நோய்‌ வந்த பின்பு செய்யும்‌ சிகிச்சையை பெறுவதை விட, நோய்‌ வருவதற்கு முன்பே வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது தான்.

இதனால்‌ மருத்துவமனை செலவுகளும்‌, நேரமும்‌ குறையும்‌, ஆரோக்கியமாக வாழலாம்‌ என்பதற்காக தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. முதலமைச்சா்‌ ஸ்டாலினின்‌ முக்கியமான திட்டங்களில்‌ இதுவும்‌ குறிப்பிடதக்கதாகும்‌.

இதன்‌ நோக்கமே ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்குவது தான். நோயின்‌ தன்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌. மேல்‌ சிகிச்சை தேவைப்படும்‌ நபா்களுக்கு உரிய பரிந்துரை செய்யப்பட்டு தொடர்‌ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்‌.

இந்த முகாமில்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டு பயனடைந்து ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்க வேண்டும்‌. இவ்வாறு மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்தார்.



இதனை தொடர்ந்து மேயர் கல்பனா ஆனந்த குமார் பேசியதாவது, முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலினின்‌ முக்கியமான திட்டங்களில்‌ கலைஞரின்‌ வருமுன்‌ காப்போம்‌ திட்டம்‌ குறிப்பிடதக்கதாகும்‌.



கோவை மாநகராட்சியில்‌ மத்தியம்‌, மேற்கு மண்டல பகுதிகளில்‌ இன்று மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில்‌ பொதுமக்கள்‌ கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து பயனடைந்து ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்க வேண்டும்‌.

மேலும்‌ சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு மேயர் கல்பனா பேசினார்.



இதனைத்தொடர்ந்து, கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ நகரங்களின்‌ தூய்மைக்கான மக்கள்‌ இயக்கம்‌ சார்பில்‌ திடக்கழிவு மேலாண்மை மற்றும்‌ சுகாதார பணிகளில்‌ சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளா்களுக்கு பாராட்டுச்‌ சான்றிதழ்களும்‌, கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருந்து பெட்டகங்களும் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில்‌ மத்திய மண்டல தலைவர்‌ மீனாலோகு, சுகாதாரக்குழு தலைவர்‌ மாரிசெல்வன்‌, நகாநல அலுவலர்‌ மரு.பிரதீப்,‌ வா.கிருஷ்ணகுமார்‌, மாமன்ற உறுப்பினா்‌ வைரமுருகன்‌‌, உதவி ஆணையர்‌ மகேஷ் கனகராஜ்‌, சுகாதார அலுவலர்‌ ராமச்சந்திரன்‌, மருத்துவ பணியாளா்கள்‌, மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...