மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெறக்கோரி கோவையில் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு உண்ணாவிரதம்

மின் கட்டண உயர்வால் மூலப்பொருட்கள், உதிரிபாகங்கள், வெட் கிரைண்டர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் என கோவையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: மின் கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியா சார்பில் கோவை சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள டாடாபாத் பகுதியில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் 20 தொழில் அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்றனர். உண்ணாவிரத போராட்டம் காரணமாக சிறு, குறு தொழில் கூடங்கள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.



சிறு, குறு தொழில் கூடங்கள் பயன்படுத்தும் தாழ்வழுத்த மின்சாரத்திற்கு பீக்ஹவர் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், சிறு, குறு தொழில் கூடங்களுக்கு நிலைகட்டணம் உயர்த்தப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்ற இரு முக்கியகோரிக்கைகளைமுன்வைத்து வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டமானது நடத்தப்பட்டது.

அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவே இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 30 கோடி ரூபாய் மதிப்பில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.



தமிழக அரசு தொழில் முனைவோரின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டண உயர்வுகளை திரும்ப பெற வேண்டும் என தொழில் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் மின்கட்டண உயர்வால் உற்பத்தியாகும் பொருட்களின் விலை 35% அதிகரிக்கும் எனவும் இந்த பாதிப்பு என்பது அனைவருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.

தொழில்துறையினருக்கு வேலைகளுக்கான ஆர்டர்கள் குறைந்துவதுடன், அடிப்படை தேவையாக இருக்கும்அனைத்து பொருட்களின் விலையும் உயரும் என்பதால் தமிழகத்தில் வெளி மாநில பொருட்கள், மற்றும் வெளிநாட்டு பொருட்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.



போலியான பொருட்கள் உற்பத்தி செய்யபட்டு சந்தைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் மின்கட்டண உயர்வால் மின்சாரம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாகும் என்றும் கூறியுள்ளனர். தமிழக மின்சார வாரியம் மின்கட்டண வருவாய் தொடர்பான வெள்ளையறிக்கை வெளியிட வேண்டுமெனவும் தொழில் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த போராட்டத்தில் பாஜக-வினர் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டுஆதரவு தெரிவித்தனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...