கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சாதி ஒழிப்பு மாவீரர்கள் நாள் கருத்தரங்கம்

கோவை ரயில் நிலையம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சாதி ஒழிப்பு போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.


கோவை: கடந்த 1957ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதிசாதி ஒழிப்பிற்காக மாபெரும் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. அன்றைய தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய சட்ட பிரிவுகள் சிலவை சாதியை பாதுகாப்பது போல் உள்ளதாக கூறி அதனை எரித்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அந்தப் போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் சிறையிலேயே உயிரிழந்தனர்.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஆண்டுதோறும் அந்த போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினமும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.



கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ராமகிருட்டிணன் தலைமையில்கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பேராசிரியர் சாரோன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடக் கழக மாநில அமைப்பு செயலாளர் ஆறுசாமி, வெளியீட்டு செயலாளர் மனோகரன், பெரியார் மற்றும் அம்பேத்கர் உணர்வாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...