துடியலூரில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம்

துடியலூர் பகுதி தி.மு.க சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளக்கிணரு அரசு பள்ளியில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


கோவை: திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு துடியலூர் பகுதி திமுக சார்பில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேற்கு ரோட்டரி கிளப், அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து வெள்ளகிணறு வி.சி.வி.அரசு மேல்நிலை பள்ளியில் பகுதியில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

மருத்துவ முகாமைதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தொடங்கி வைத்தார். முகாமில் கண்ணில் புரை உண்டாகுதல், மாறுகண்,நீர் அழுத்தம், மாலை கண் நோய், சீழ் மற்றும் நீர் வடிதல், தூர பார்வை, கிட்ட பார்வை, ஆகியவற்றிற்கு மருத்துவர்களால் இலவச பரிசோதனை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை தேவைப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். முகாமில் சுற்றுப் பகுதிகளில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட அவை தலைவர் பழனியப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம், வட்ட செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கற்பகம் ராஜசேகர், புஷ்ப மணி அருள்குமார், சுமதி,சித்ரா தங்கவேலு, சாந்தாமணி பச்சைமுத்து,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...