பல்லடத்தில் கைது செய்ய சென்ற உதவி ஆய்வாளரின் கையை கடித்த குற்றவாளியால் பரபரப்பு

பல்லடம் அறிவொளி நகரில் கைது செய்ய சென்ற இடத்தில் குற்றவாளி கடித்ததால் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: பல்லடம் அறிவொளி நகர் பகுதியில் வசித்து வருபவர் பாபா பஹ்ரூதீன். இவருக்குமனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாபா பஹ்ரூதீனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே மனைவி வேலை செய்யும் பனியன் நிறுவனத்திற்க்கு சென்ற பஹ்ரூதீன் தனது மனைவிக்கு எப்படி வேலை கொடுக்கலாம் என கூறி மேலாளர் சஞ்சய் குமார் என்பவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பனியன் நிறுவன மேலாளர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்ற பல்லடம் போலீசார் பாபா பஹ்ரூதீன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில்பாபா பஹ்ரூதீன் பல்லடத்தை அடுத்தஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில்பணியாற்றும்அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக கிடைத்ததகவலையடுத்துபோலீசார் சம்பவ இடத்திற்குசென்றனர்.



அப்போது ஆறுமுத்தாம் பாளையம் ஊராட்சி அலுவலகத்தின் கதவை அடைத்துக் கொண்டு பஹ்ரூதீன் அரை நிர்வாணமாக இருந்துள்ளார். இதனை அடுத்துஉதவி ஆய்வாளர் கார்த்திகேயன் கைது நடவடிக்கையில் ஈடுபடும் போதுயாரும் எதிர்பாரத விதமாக பாபா பஹ்ரூதீன் உதவி ஆய்வாளர் கையை பிடித்து கடித்துள்ளார்.

இதனால் உதவி ஆய்வாளர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் பஹ்ரூதீனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.குற்றவாளி பஹ்ரூதீன் கடித்ததால் பலத்த காயமடைந்தஉதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...