திருப்பூரில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் - கூடுதல் காவல் தலைமை இயக்குநர் துவக்கி வைத்தார்

குள்ளேகவுண்டன் புதூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்த கூடுதல் காவல் தலைமை இயக்குநர் சஞ்சய் குமார், அங்கு பயிற்சியும் மேற்கொண்டார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட குள்ளேகவுண்டன் புதூரில் தனியார் பள்ளி வளாகத்தில் பிளாட்டோஸ் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மையத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் சஞ்சய் குமார் கலந்து கொண்டு, துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார். இதன் பின்னர் துப்பாக்கி சுடும் மையத்தின் தரத்தை ஆய்வு செய்து பயிற்சியாளர்களின் அனுபவம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.



இதனையடுத்து பயிற்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஏர் கன் வகைகளை பார்வையிட்டு துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டார். அப்போது திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரனும் அவருடன் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மேற்கொண்டார்.



இறுதியாக இருவருக்கும் பயிற்சி மையத்தின் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...