மத்திய அரசின் தவறான கொள்கைக்கு திருப்பூர் தொழில் துறையே உதாரணம் - திருப்பூரில் சி.பி.எம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்.

நவம்பர் புரட்சி தின 105 வது ஆண்டையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் நடைபெற்ற செந்தொண்டர் பேரணி, பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிருந்தா காரத், பாஜக அரசின் தவறான கொள்கைகளால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்து உள்ளதாகவும், நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.



திருப்பூர்: நவம்பர் புரட்சி தினத்தின் 105 வது ஆண்டை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், செந்தொண்டர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கலந்து கொண்டார்.



திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் இருந்து துவங்கிய செந்தொண்டர் பேரணி புஷ்பா ரவுண்டானா,ரயில்வே மேம்பாலம், குமரன் சாலை வழியாக பொதுக்கூட்டம் நடைபெற்ற யூனியன் மில் சாலையில் நிறைவடைந்தது.

இந்த பொதுக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசியதாவது, மத்திய அரசின் தவறான கொள்கைகளுக்கு திருப்பூர் தொழில்துறையே உதாரணம். மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பல்லாயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

இந்தியா முழுவதும் பெரும் சவாலை சந்திக்கிறது. ஆனால் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. திமுக தலைமையிலான கூட்டணி பாஜக -ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக அவர்களின் தவறான கொள்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.



தமிழகத்தில் மின் கட்டண உயர்வு காரணமாக சிறு குறு நடுத்தர தொழில்கள் பாதிப்புக்குள்ளாவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. விரைவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்.



பாஜக தலைமையிலான மத்திய அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கிய 10 லட்சம் கோடி வாராக் கடனாக தள்ளுபடி செய்து மீண்டும் அவர்களுக்கு கடன் எளிதில் வழங்கி வருகிறது. நாம் மிகப் பெரும் சவாலை சந்தித்து வருகிறோம். இருப்பினும் கம்யூனிஸ்டுகள் புதிய இந்தியாவை உருவாக்குவதில் நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...