குடிபோதையில் இருந்த கணவனை கிரைண்டர் கல்லால் அடித்துக் கொன்ற மனைவி கைது - கோவையில் பரபரப்பு..!

கோவை போத்தனூர் அருகே குடிபோதைக்கு அடிமையான கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், உறங்கிக் கொண்டிருந்த கணவனின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொலை செய்த மனைவி கைது செய்து போலீசார் விசாரணை.



கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் அடுத்த பிள்ளையார்புரம் சிவன்மலை பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கன் (35) - கோகிலா (30) தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில், இவர்களுக்கு 7 வயதில் மகள் உள்ளார்.

ரங்கன் குடிபோதையில் வீட்டிற்கு வருவதால் அவருக்கும் மனைவி கோகிலாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் காலையில் இருந்து குடிபோதையில் இருந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் தூங்கச் சென்ற நிலையில், இரவு சுமார் 11.30 மணியளவில் ஆத்திரத்தில் இருந்த கோகிலா கிரைண்டர் கல்லை தூக்கி ரங்கன் தலையில் போட்டதாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு அங்கு வந்த ரங்கனின் உறவினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.



இந்நிலையில், மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போத்தனூர் போலீசார், ரங்கன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துடன், கோகிலாவை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிபோதையில் இருந்த கணவனின் தலையில் கிரைண்டர் கல்லை போட்டுமனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...