கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து ரூ.27.6 லட்சம் அபராதம் வசூல் - 276 பேர் மீது வழக்கு

மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் விதிக்கப்படும் அபராத தொகை உயர்த்தப்பட்ட நிலையில் கோவையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 276 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலா ரூ.10,000 என ரூ.27.6 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல்.


கோவை: தமிழகத்தில் மோட்டார் வாகன சட்டத்தில் குற்றச் செயலில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதன் படி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000, அதிவேகத்தில் வாகனம் இயக்கினால் ரூ.1,000, ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.1,000 என கடுமையாக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி முதல் கடந்த 16 ஆம் தேதி வரை சுமார் 24 நாட்களில் மட்டும் மோட்டார் வாகன விதிமீறலில் ஈடுபட்ட 7,636 பேருக்கு ரூ.97 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அதிவேகமாக வாகனம் ஓட்டிய 29 பேருக்கு தலா ஆயிரம் என ரூ.29,000 அபராதமும், சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிச் சென்ற 88 பேருக்கு தலா ரூ.500 என ரூ.44 ஆயிரமும் விதிக்கப்படுள்ளது.

இதனிடையே, குடிபோதையில் வாகனத்தை ஓட்டினால் ரூ.2,000-ல் இருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்ட நிலையில், கடந்த 24 நாட்களில் குடிபோதையில் வாகனத்தை இயக்கிய 276 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.27.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதே போல செல்போன் பேசியவாறு வாகன ஓட்டிய 242 பேருக்கு தலா ரூ.1,000 என ரூ.2.4 லட்சம், சிக்னலை கடந்த சென்ற 714 பேருக்கு தலா ரூ.500 என ரூ.3.6 லட்சம் , ஹெல்மெட் அணியாமல் சென்ற 5,892 பேருக்கு தலா ரூ.1,000 என ரூ.58.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது, சாலை விதிகளை மீறியவர்கள் மீது விதிக்கப்பட்ட அபராதம் குறித்த ரசீதுகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த அபராத தொகையை ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.

மேலும் உங்களது வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய எம்.பரிவாகன் என்ற செயலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...