வடவள்ளி அருகே பட்டப்பகலில் பெண்ணை மிரட்டி 25 சவரன் நகை, ரூ.7 லட்சம் பணம் மற்றும் காரை கொள்ளை - மர்ம நபர் கைவரிசை..!

கோவை வடவள்ளி அருகே பூக்கடை உரிமையாளர் பெரியசாமியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவர், தனியாக இருந்த அவரது மனைவியை மிரட்டி 25 சவரன் நகை, ரூ.7லட்சம் மற்றும் ஆல்டோ கார் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி மாதவன் நகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர், பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஸ்வரி.

இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல 10 மணி அளவில் பெரியசாமி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது மகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அப்போது திடீரென வீட்டிற்கு புகுந்த இரண்டு இளைஞர்கள் மகேஸ்வரியின் கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து வீட்டில் இருந்த பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகை, ரூ.7லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

பள்ளி படித்து வரும் மகனை கொலை செய்ய வந்ததாகவும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்திருப்பதால் எங்களுக்கு கொல்ல மனமில்லை என்று கூறிவிட்டு, வீட்டின் வெளியே இருந்த காரைஎடுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெரியசாமி அளித்த புகாரின் பேரில், சம்பவஇடத்திற்கு வந்த வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணம், மற்றும் கார் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் இருவர் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...