கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் முறைகேடு - முன்னாள் காவலாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

புலியகுளம் விநாயகர் கோவிலில் பூஜை பொருட்கள், பால், அர்ச்சனை சீட்டு உள்ளிட்டவற்றில் முறைகேடு நடப்பதாகவும், கோவில் நிர்வாகிகள் பக்தர்களிடம் வெளிப்படையாக பணம் வாங்குவதாகவும் முன்னாள் காவலாளி குமரேசன் குற்றச்சாட்டு.


கோவை: கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலாக புலியகுளம் விநாயகர் கோவில் விளங்கி வருகிறது. இந்த கோவிலில்காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் குமரேசன்.



இந்நிலையில் அவர் புலியகுளம் விநாயகர் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.



அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவிலில் பூஜை பொருட்கள் வாங்குவது, பால் அபிஷேசகத்திற்காக பால் வாங்குவது, அர்ச்சனை சீட்டு வழங்குவது, போன்றவற்றில் முறைகேடு நடக்கிறது.

கோவில் நிர்வாகிகள் பக்தர்களிடம் வெளிப்படையாக பணம் வாங்குகின்றனர். விஐபிக்களுக்கு மட்டும் தீபாராதனை காட்டப்படுகிறது. இதனை கோவில் தலைவர் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்.

இது போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம்உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...