வால்பாறை முடீஸ் டவுன் பஜாரில் குடிநீர் விநியோகம் திடீர் நிறுத்தம் - ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் மனு

வால்பாறை முடீஸ் டவுன் பஜாரில் எந்த வித முன்னறிவிப்பின்றி BBTC நிர்வாகம் குடிநீர் விநியோகத்தை நிறுத்தி விட்டதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாரா மனு அளித்துள்ளனர்.



கோவை: வால்பாறை முடீஸ் டவுன் பஜாரை இயக்கி வந்த BBTC நிர்வாகம் அரசாங்கத்திடமிருந்து குத்தகையாக தனியார் சந்தை அனுமதி பெற்று பஜாரை நடத்தி வந்தது. அதன்படி பஜார் வளாகத்திற்கு சுத்தமான குடிநீர் வழங்கப்பட வேண்டும், சந்தையை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும், சந்தை மக்களுக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும், வருடத்தின் மொத்த வசூலில் 15% யை வால்பாறை நகரியத்திற்கு செலுத்த வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்துள்ளது.



ஆனால் கடந்த சில ஆண்டுகளாக BBTC நிர்வாகம் அதனை பின்பற்றாமல் இருந்து வந்ததாகவும், இது குறித்து வால்பாறை நகராட்சியில் உள்ள அனைத்து அரசு அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையை எடுக்க வில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குடிநீர் வழங்கி வந்ததை நிர்வாகம் நிறுத்தி விட்டதாக கூறி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அரசு அதிகாரிகள் தனியார் நிர்வாகத்திற்கு சாதகமாகவே செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...