பாரதியார் பல்கலையில் 97,123 மாணவர்களுக்கு இன்று பட்டமளிப்பு விழா


கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் அறிவியல் மருத்துவர், முனைவர், இளநிலை முனைவர், இளங்கலை மற்றும் முதுகலை உள்ளிட்ட மாணவர்களுககு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.



இவ்விழாவில் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் கணபதி. முதன்மை விருந்தினராக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் மேன்மைமிகு விஞ்ஞானி சசிபாலா சிங், பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அர.சுப்பையன் மற்றும் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்களும், மாணவ, மாணவிகளும் கலந்துகொண்டனர்.

இதில், பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கணபதி தலைமையேற்று வரவேற்புரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இயலாத தமிழக ஆளுநரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமாகிய வித்யாசாகர் ராவ் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.வி.அன்பழகன் ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், தான் பாரதியார் பல்கலைக் கழகத்தின் 10-வது துணைவேந்தராக பதவியேற்ற பின்பு பல்கலைக் கழகத்தின் தரத்தினை இந்திய அளவில் 14-வது இடத்திற்கும், தமிழக அளவில் முதலிடம் பிடித்ததையும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

மேலும், என்ஏஏசி கமிட்டியின் "ஏ" சான்றிதழ் பெற்றதையும், ஆராய்ச்சி பணிகளில் பல்கலைக் கழகத்தின் பங்களிப்பையும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளையும் குறிப்பிட்டார்.



இதைத்தொடர்ந்து பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தில் (டிஆர்டீஓ) தலைமை இயக்குநர் சசிபாலா சிங், பட்டங்கள் பெற்ற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும், உலகிலேயே இந்தியாவில் தான் 15-30 வயது வரை 40 சதவிகிதம் இளைஞர்கள் உள்ளனர். தற்போது இந்தியா வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகள் பட்டியலுக்கு வேகமாக முன்னேறி வருகிறது. 20-ம் நூற்றாண்டில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மகத்தானது என்று குறிப்பிட்டார்.

மேலும், இயற்கை பேரிடர்களில் சிக்கும் ராணுவ வீர்ர்களை மீட்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் முன்னாள் துணை வேந்தர் சுப்பையன் முதலில் அறிவியல் மருத்துவர் பட்டம் பெற்றார். இதைத்தொடர்ந்து, பட்டமளிப்பு விழாவில் 3 அறிவியல் மருத்துவர் பட்டங்கள், 1020 முனைவர் பட்டங்கள், 2250 இள முனைவர் பட்டங்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் என மொத்தம் 97123 பட்டங்கள் வழங்கப்பட்டது.

இதில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவர் சபன் பரீத் பொருளாதாரவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

Newsletter

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...

கோவில்மேட்டில் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Coimbatore: கோவை கோவில்மேடு பகுதியில் பேருந்து நிறுத்தம், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மா...

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...