கோவையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு

கோவை கவுண்டம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்து 12 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்த போலீசார்,ஜாமினில் அவர்களை விடுதலை செய்தனர்.


கோவை: துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவுண்டம்பாளையம் அருகே உள்ள சேரன் நகர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில்அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்ட போலீசார், விடுதி ஒன்றில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், ராஜேஷ், கண்ணப்ப நகரைச் சேர்ந்த வேடியப்பன், சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த விமல் ராஜ், பி.என்.புதூரைச் சேர்ந்த கார்த்திக் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

இதனைதொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 12 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்ததுடன் 5 பேரையும் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...