கோவையில் மறைந்த திமுக பிரமுகர் பங்காருசாமியின் 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி

துடியலூரில் நடைபெற்ற மறைந்த திமுக பிரமுகர் பங்காருசாமியின் 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: துடியலூர் பகுதி திமுக முன்னாள் அவைத்தலைவரும்,பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அவைத்தலைவரும்,செயலாளருமாக இருந்த மறைந்த பங்காருசாமியின் 10-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

துடியலூர் திமுக மன்றத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் மற்றும் பகுதி கழக செயலாளர் அருள்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பங்காருசாமியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞர் அணியினர் 100க்கும் மேற்பட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட கழக துணை செயலாளரும் பங்காருசாமியின் பேரனுமான தமிழ் நிதி செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட அவை தலைவர் பழனியப்பன், வட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...