சூடான் நாட்டு நோயாளிக்கு வாழ்வளித்த கேஎம்சிஎச்


சூடான் நாட்டைச் சேர்ந்த 42 வயதான முகமது அப்துல்ரெஹ்மான், இருதய நோய்க்கு சரியான சிகிச்சை பெற, இந்தியாவின் முக்கிய நகரங்களான மும்பை, பெங்களூரு, சென்னை நகரங்களுக்கு நல்ல மருத்துவமனையை தேடி ஆறு மாதங்களாக அலைந்து கொண்டிருந்தார்.



இறுதியாக அவரது நண்பரின் அறிவுரையை ஏற்று, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவருக்கு 2017 ஜனவரி முதல் வாரத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக இங்கு மேற்கொள்ளப்பட்டது.

நியாயமான கட்டணத்தில் குறுகிய கால காத்திருப்பில் அவருக்கு விரைவான அறுவை சிகிச்சை அவரை கவர்ந்தது. முகமது அப்துல்ரெஹ்மான் கடந்த ஆறு மாதங்களாக நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தபோதும், அவருக்கு சில அடிப்படை பரிசோதனைகளில், இருதய ரத்த நாளங்களில் அடைப்புகள் இருப்பதை மட்டுமே கண்றியப்பட்டிருந்தது.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனைக்கு அவர் வந்தபின், இருதய சிகிச்சைப் பிரிவு ஆலோசகர் டாக்டர் டிஎம்டி சரவணன், இருதய ரத்த நாளங்களில் பல இடங்களில் மிக மோசமான பல அடைப்புகள் இருப்பதை கண்டுபிடித்து விரைவிலேயே அறுவை சிகிச்சை செய்து கொள்ளமாறு அறிவுறுத்தினார்.

 

கேஎம்சிஎச் இருதய அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் தேவந்திர சிங் கூறுகையில், "இவரது இருதய குழாயில் பல்வேறு இடங்களில் அடைப்புகள் இருந்ததால், இந்த அறுவை சிகிச்சை சவாலாக இருந்தது. தொழில்நுட்ப ரீதியாகவும் சவாலானது. 

இந்த நிலையில், அறுவை சிகிச்சை குழுவினர் ஒட்டுமொத்த பைபாஸ் ஆபரேஷன் செய்ய முடிவு செய்து ஆபரேஷனை வெற்றிகரமாக செய்தது. இந்த அறுவை சிகிச்சை நீண்ட கால அடிப்படையில் பயனளிக்கும் விதமாக இருக்கும்.

இரண்டு வாரங்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முகமது அப்துல்ரெஹ்மான் வழக்கமான பணிகளை இன்னும் ஒரு மாத காலத்தி்ற்கு பின் எளிதாக மேற்கொள்ள முடியும்.

இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சைகளை சவாலாக கேஎம்சிஎச்-சில் ஏற்று செய்யப்படுவதால், சர்வதேச அளவில் உள்ள நோயாளிகள் இங்கு வர ஆர்வம் காட்டுகின்றனர்" என்றார்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிச்சாமி, சூடான் நாட்டினருக்கு, இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்கள் குழுவினரை பாராட்டினார். கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், இதற்கான வசதிகள் உள்ளதால் டாக்டர்கள் தன்னம்பிக்கையுடன் சிகிச்சையை மேற்கொள்கின்றனர்," என்றார்.

கேஎம்சிஎச் மருத்துவமனை, இந்த மண்டலத்தில் உள்ள பொதுமக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச அளவிலான நோயாளிகளுக்கும் அவர்களது பயணத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. கோவைக்கு சர்வதேச விமான போக்குவரத்து ஒரு குறையாக இருந்தாலும், கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்க நாடுகள், அரபு நாடுகளிலிருந்தும் சிகிச்சைக்காக கோவைக்கு வருகின்றனர். குறிப்பாக சூடான், யேமன், ஓமன் நாடுகளிலிருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர்.

Newsletter

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...