விவசாய பணியில் 10 பேர் செய்யும் வேலையை ஒரே நேரத்தில் செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவை நிறுவனம்

விவசாய நிலங்களில் களையெடுப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அக்ரி ஈசி என்ற இயந்திரத்தை கோவை சேர்ந்த தனியார் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.


கோவை: நிலத்தில் இறங்கி வேளாண் பணிகளை மேற்கொள்ள சமீபகாலமாக ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. எனவே அதனை ஈடுகட்டும் விதமாக இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன.



அந்த வகையில் களையெடுப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அக்ரி ஈசி என்ற இயந்திரத்தை கோவையை சேர்ந்த புல் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த இயந்திரத்தை கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் சீதாலட்சுமி அறிமுகப்படுத்தி வைத்தார்.



"அக்ரிஈஸி" இயந்திரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய லித்தியம் பேட்டரியால் இயக்கப்படுகிறது. இந்த எந்திரம் களை எடுப்பது மட்டுமின்றி சில மாற்று உபகரணங்களை உபயோகப்படுத்தி பயிர்களுக்கு மருந்து தெளிக்க, பளு தூக்க மற்றும் பல விவசாய பணிகளையும் செய்யும் விதத்தில் உருவக்கப்பட்டுள்ளது.

தேவைக்கேட்ப மாற்று உபகரணங்களை நான்கு நிமிடத்தில் பொருத்தி அதற்கான பணிகளை செய்யும் வண்ணம் இந்த "அக்ரிஈஸி" வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை பயன்படுத்தி 10 வேலையாட்கள் செய்யும் பணிகளை ஒரு நபரால் செய்யமுடியும் என அதனை வடிவமைத்துள்ள புல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

களை எடுப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் இந்த இயந்திரத்தை மண்ணின் தன்மையை பொருத்து 5 மாறுபட்ட வேகங்களில் இயக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் நான்கரை மணி நேரம் தொடர்ந்து இயக்கமுடியும் என தெரிவித்துள்ள புல் நிறுவனம், இயந்திரத்தில் இருக்கும் தெளிப்பான் 33 லிட்டர் கொள்ளளவு கொண்டது என தெரிவித்துள்ளது. இந்த இயந்திரம் சுமார் 80 கிலோ வரை எடை தூக்க வல்லமை கொண்டது என தெரிவித்துள்ள அந்நிறுவனம் இதில் செல்போன் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளதாக கூறியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...