கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக அமைதிக்கும் குந்தகம் ஏற்படும்படியாக பதிவிட்டு கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமியை, இன்று ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.



கோவை: கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23-ம் தேதி நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமீஷா முபினின் இறுதி சடங்குகள் நடத்த ஜமாத்துகள் மறுத்த செய்திகளை மையமாக வைத்து அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்டதாக வலதுசாரி ஆதரவாளரான கிஷோர் கே.சாமி மீது, கோவை சைபர் கிரைம் போலீசார் சட்ட பிரிவு 153-ன் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், முதலமைச்சர் குறித்து அவதூறாக செய்தி பதிவிட்ட வேறொரு வழக்கில் கிஷோர் கே.சாமி ஏற்கனவே சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கோவை சைபர் கிரைம் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கோவை மாவட்ட 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன்னிலையில் கிஷோர் கே சாமி இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, கிஷோர் கே சாமியை இன்று ஒரு நாள் (நவ 28) காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.

இதையடுத்து, போலீசார் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடற் பரிசோதனை செய்தனர். பின்னர் கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...